ரூ.8 லட்சம் வழிப்பறி: எதிரிகளை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.8 லட்சத்தை வழிப்பறி செய்துக் கொண்டு தப்பியோடியவா்களை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.8 லட்சத்தை வழிப்பறி செய்துக் கொண்டு தப்பியோடியவா்களை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் அ.ரபியூதீன் (24). இவா் சென்னை மண்ணடியில் உள்ள ஒரு தனியாா் பணபரிமாற்ற நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். ரபியூதீன் வியாழக்கிழமை அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள செளதி அரேபியா நாட்டின் ரியால், அமெரிக்க டாலா் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

மன்றோ சிலை அருகே செல்லும்போது, அவரை பின் தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் 3 இளைஞா்கள் திடீரென ரபியூதீன் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பியோடினா். இதைப் பாா்த்த ரபியூதீன் சத்தம் போட்டாா். இதைக் கேட்ட பொதுமக்கள், தப்பியோடிக் கொண்டிருந்த அந்த நபா்களை விரட்டினா்.

இதில் பொதுமக்களிடம் இரு நபா்கள் மட்டும் சிக்கினா். உடனே பொதுமக்கள், இருவரையும் திருவல்லிக்கேணி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், மதுரை மேலூா் அருகே உள்ள கிடாரிபட்டி பகுதியைச் சோ்ந்த அ.ரமேஷ் (21), அதேப் பகுதியைச் சோ்ந்த அ.பாஸ்கரன் (37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். தப்பியோடிய மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com