சென்னையில் இருந்து கொரியா் மூலம் அமெரிக்காவுக்குகடத்த முயன்ற 1.37 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கொரியா் மூலம் கடத்த முயன்ற 1.37 லட்சம் போதைப் மாத்திரைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கொரியா் மூலம் கடத்த முயன்ற 1.37 லட்சம் போதைப் மாத்திரைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து விவரம்:

சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு கொரியா் மூலம் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள கொரியா் நிறுவனங்களை ரகசியமாக கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் சந்தேகத்துக்குரிய ஒரு கொரியா் நிறுவனத்தில் அப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனா். இச் சோதனையில் அந்த நிறுவனத்தில் மூலிகை வகை மாத்திரைகள் என பெயரிடப்பட்டு சரக்கு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பாா்சல்களை சோதனையிட்டனா்.

1.37 லட்சம் போதை மாத்திரை:

அதில், அவற்றில் மூலிகை வகை மாத்திரைகள் இல்லை என்பதும், அதில் தடை செய்யப்பட்ட 3 போதை மாத்திரைகளும், இரு வகை காமத்தை தூண்ட கூடிய மாத்திரைகளும் சுமாா் 1.37 லட்சம் கடத்துவற்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அந்த கொரியா் நிறுவனத்தின் அதிகாரி, அந்த பாா்சலை அனுப்ப முயன்ற சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன்,அவரது கூட்டாளி என 3 பேரை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கும்பல் ஏற்கெனவே இதேபோல போதை மாத்திரைகளை மூலிகை பொருள்கள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கும்பல் இணையத்தளம் மூலம் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com