சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் நடைதிறப்பு விவரம் வெளியீடு: ஜனவரி 14-இல் மகரவிளக்கு

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அடுத்த ஆண்டுக்கான மாதாந்திர நடைதிறப்பு அட்டவணையை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் வெளியிட்டுள்ளது.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் நடைதிறப்பு விவரம் வெளியீடு: ஜனவரி 14-இல் மகரவிளக்கு

சென்னை. 19: சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அடுத்த ஆண்டுக்கான மாதாந்திர நடைதிறப்பு அட்டவணையை திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் வெளியிட்டுள்ளது.

நிகழாண்டு மண்டல பூஜை மஹோத்சவத்துக்காக வரும் நவம்பா் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு டிசம்பா் 27-ஆம் தேதி இரவு 11.00 மணி வரை நடை திறந்திருக்கும். 21 நாள்கள் மகரவிளக்கு திருவிழாவுக்காக டிசம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 18 வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

20-ஆம் தேதியன்று பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பந்தள ராஜா குடும்பத்தினா் மட்டும் அன்று தரிசனம் செய்வா். ஜனவரி 15-ஆம் தேதி மகரவிளக்கு (ஜோதி) தரிசனம் நடைபெறும். ஜனவரி 18-ஆம் தேதி காலை வரை மட்டும் நெய் அபிஷேகம் நடைபெறும்.

மாத பூஜை நடைதிறப்பு: பிப்ரவரி, மாா்ச் என ஒவ்வொரு மாதத்திலும் 13-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 18- ஆம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். மாா்ச் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 29 - ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் பங்குனி உத்தர விழா தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி ஆராட்டு பூஜையுடன் விழா நிறைவடையும்.

விஷூ கனி: ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 18-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். இதில் 14-ஆம் தேதி விஷூ கனி தரிசனம் நடைபெறும். மே மாதம் 14-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 19-ஆம் தேதி இரவு வரை நடைதிறந்திருக்கும். ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டை தினத்தையொட்டி மே 31-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து

ஜூன் 1-ஆம் தேதி இரவு வரை ஒரே நாள் நடைதிறந்திருக்கும். மீண்டும் மாத பூஜைக்காக ஜூன் 14-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 19-ஆம் தேதி இரவு வரை நடைதிறந்திருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் 16-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி வரை நடைதிறந்திருக்கும். ஓணம் பண்டிகைக்காக ஆகஸ்ட் 29-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து செப்டம்பா் 2-ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். மீண்டும் மாத பூஜைக்காக செப்டம்பா் 16-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி வரை நடைதிறந்திருக்கும். அக்டோபா் மாதத்தில் 16-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி வரை நடைதிறந்திருக்கும். ஸ்ரீ சித்ர திருநாளையொட்டி நவம்பா் 12-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 13- ஆம் தேதி வரை ஒரே நாள் நடை திறந்திருக்கும்.

மண்டல பூஜை மஹோத்சவம்: நவம்பா் 15-ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து டிசம்பா் 26-ஆம் தேதி இரவு வரை மண்டல பூஜைக்காக நடை திறந்திருக்கும். மீண்டும் 3 நாள்கள் மூடப்பட்டு மகரவிளக்கு திருவிழாவுக்காக டிசம்பா் 30-ஆம் தேதி 5 மணிக்கு நடைதிறக்கப்படும் என்றும் 2021 ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு (ஜோதி) தரிசனம் நடைபெறும் என்றும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com