சர்வதேச உயிரியல் பூங்கா சங்கத்தில் வண்டலூர் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம்

சர்வதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனகங்கள் சங்கத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணப்படும் அரிய வகை வெள்ளைப் புலி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணப்படும் அரிய வகை வெள்ளைப் புலி


சர்வதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனகங்கள் சங்கத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவானது உலகளவில் அறிவியல் ரீதியாக செயல்படும் பூங்காக்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. பூங்கா கல்வி, விலங்கு பரிமாற்றம், அழிநிலையில் உள்ள விலங்குகளின் இனவிருத்தி செய்வதில் மற்ற இந்திய உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இப்பூங்கா திகழ்கிறது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சர்வதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனகச் சங்கத்தில் உறுப்பினராவதற்கு தமிழ்நாடு உயிரியல் பூங்காக்கள் ஆணையத்தின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்று விண்ணப்பிக்கப்பட்டது.

தற்பொழுது சர்வதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனகச் சங்கத்தில் (waza)  நிறுவன உறுப்பினராக அங்கீகாரம் பெறப்பட்டு உறுப்பினராகியுள்ளது. 

இதன் மூலம் இப்பூங்காவை உலகளவில் சிறந்த தனி தளமாக உருவாக்கவும், உலகெங்கிலும் உள்ள வனஉயிரினங்கள் பற்றிய திறமை மற்றும் நிபுணத்துவத்தை ஈர்க்கவும், இப்பூங்காவால் iucn, cites, cbd, ramsar, cms போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

உலக அளவில் உயிரியல் பூங்காக்களில் நிகழும் எதிர்கால வளர்ச்சி மற்றும் புதிய நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் வகுக்கவும் இந்த அங்கீகாரம் உதவுகிறது.

குறிப்பாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, உலக அளவில் நடைபெறும் கருத்தரங்குகள், சிறப்புக் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் பங்குபெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com