அரக்கோணம்-ஜோலார்பேட்டை பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 24) முதல் சனிக்கிழமை (செப்.28) வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. 
அரக்கோணம்-ஜோலார்பேட்டை பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்


அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 24) முதல் சனிக்கிழமை (செப்.28) வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. 
வேலூரில் இருந்து மாலை 5.10 மணிக்கு இயக்கப்படும் வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் பயணிகள் ரயில்கள் அனைத்தும், புதன் (செப்.25), வியாழன் (செப்.26), சனி  (செப்.28)  ஆகிய நாள்களில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும் ஜோலார்பேட்டை - அரக்கோணம் பயணிகள் ரயில்கள் அனைத்திலும் புதன் (செப்.25), வியாழக்கிழமை (செப்.26) இரண்டு நாள்களும் ஜோலார்பேட்டை- லத்தேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் அரக்கோணம்- வேலூர் கன்டோன்மென்ட் பயணிகள் ரயில் சனிக்கிழமை (செப்.28) சேவூர்- வேலூர் கன்டோன்மென்ட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  
ரயில்கள் தாமதம்: பெங்களூரு கன்டோன்மென்ட்- அகர்தலா ஹம்சஃபர் விரைவு ரயில், லத்தேரிக்கு 140 நிமிஷம் வரையும், யஷ்வந்த்பூர் -ஹெளரா விரைவு ரயில், காவனூருக்கு 60 நிமிடம் வரையும், கேஎஸ்ஆர் பெங்களூரு- காக்கிநாடா டவுன் சேஷாத்ரி விரைவு ரயில், குடியாத்தத்துக்கு 35 நிமிடம் வரையும், திருப்பதி - மன்னார்குடி பாமணி விரைவு ரயில், 30 நிமிடம் வரையும் , திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில் காட்பாடிக்கு 10 நிமிடம் வரை செவ்வாய்க்கிழமை (செப்.24) தாமதமாக வர வாய்ப்புள்ளது. 
மைசூரு - தர்பங்கா பாக்மதி விரைவு ரயில் காட்பாடிக்கு 115 நிமிடமும், டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில், சேவூருக்கு 115 நிமிடமும், ஜோலார்பேட்டை - அரக்கோணம் பயணிகள் ரயில் லத்தேரிக்கு 25 நிமிடங்கள் வரையும் சனிக்கிழமை (செப்.28) தாமதமாக வாய்ப்புள்ளது. 
சிறப்பு ரயில்: பயணிகளின் வசதிக்காக வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் சிறப்பு ரயில், வேலூரில் இருந்து மாலை 5.40 மணிக்கு புதன் (செப்.25), வியாழன் (செப்.26), சனிக்கிழமைகளில் (செப்.28) இயக்கப்படுகிறது. 
லத்தேரி - அரக்கோணம் சிறப்பு பயணிகள் ரயில், லத்தேரியில் இருந்து புதன் (செப்.25), வியாழன் (செப். 26) மாலை 6.10 மணிக்கு இயக்கப்படுகிறது. 
சேவூர் - வேலூர் கன்டோன்மென்ட் சிறப்பு பயணிகள் ரயில், சேவூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு, சனிக்கிழமை (செப்.28) இயக்கப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com