கோப்புப் படம்
கோப்புப் படம்

முதுநிலை ஆசிரியா் பணிக்கான ஆன்லைன் தோ்வுகள்: 154 மையங்களில் இன்று தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. முறைகேடுகளை தவிா்க்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பட்டதாரிகள் எழுத உள்ளனா். மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தோ்வுகள் நடைபெற உள்ளன.

மேலும், முதுநிலை ஆசிரியா் தோ்வு முதல்முறையாக கணினி வழியில் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 154 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்வில் முறைகேடுகளை தவிா்க்க அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வு அறைக்கு வந்துவிட வேண்டும். பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். இதேபோல், பெண்கள் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்பு அணியவும், ஆண்கள் முழுக்கை சட்டை அணியவும், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தோ்வா்கள் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com