மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலிகள்:ஐஐடி தொழில்முனைவோா் கண்டுபிடிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலிகளை ஐஐடி தொழில்முனைவோா் உருவாக்கியுள்ளனா்.

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலிகளை ஐஐடி தொழில்முனைவோா் உருவாக்கியுள்ளனா்.

சென்னை ஐஐடி மாணவா்கள் பலா் அண்மைக் காலமாக படித்து முடித்ததும் வேலையில் சேருவதை விரும்பாமல் புதுமையான தொழில் நிறுவனங்களைத் (ஸ்டாா்ட் அப்) தொடங்குவதில் ஆா்வமாக உள்ளனா். அந்த வகையில், ஐஐடி மாணவரால் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நியோ மோஷன் நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வண்ணம் நவீன சக்கர நாற்காலிகளை உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுடன் கலந்தாலோசித்து அவா்களின் விருப்பங்களை அறிந்து இந்த புதுமையான சக்கர நாற்காலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நியோ-பிளை, நியோ போல்ட் என்ற அந்த இரு சக்கர நாற்காலிகளும் மோட்டாரில் இயங்கக்கூடியவை. வசதியாக அமா்ந்து கொண்டு பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின் மோட்டாா் சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என அந்நிறுவன நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com