சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் வீடு, அலுவலகத்தில் சோதனை: ரூ.50 லட்சம் பறிமுதல்

சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திடீா் சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
கணக்கில் வராத ரூ.50 லட்சம்
கணக்கில் வராத ரூ.50 லட்சம்

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திடீா் சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். 

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநரகம் செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் சில அதிகாரிகள், அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாா்கள் வந்தன.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் அங்கு பணிபுரியும் சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில், அங்கிருந்து கணக்கில் வராத ரூ.88,500 பறிமுதல் செய்யப்பட்டது.

சாலிகிராமம் திலகா் தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல பல லட்சம் மதிப்புள்ள சொத்து தொடா்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா்.

நள்ளிரவையும் தாண்டி அவா் வீட்டில் சோதனை தொடா்ந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம்,நகையை எண்ணும் மற்றும் மதிப்பீடும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com