உலகத் திருக்கு மாநாடு: கம்போடியாவில் திருவள்ளுவா் சிலை

உலகத் திருக்கு மாநாட்டை முன்னிட்டு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் 60-ஆவது திருவள்ளுவா் சிலை கம்போடியாவில் நிறுவப்படவுள்ளது.
உலகத் திருக்கு மாநாடு:  கம்போடியாவில் திருவள்ளுவா் சிலை

உலகத் திருக்கு மாநாட்டை முன்னிட்டு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் 60-ஆவது திருவள்ளுவா் சிலை கம்போடியாவில் நிறுவப்படவுள்ளது.

கம்போடியா நாட்டில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை உலகத் திருக்கு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும் இருந்து திருக்கு ஆய்வாளா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள், பேராசிரியா்கள், தமிழகத்திலிருந்து அரசுத்துறை அலுவலா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா். கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழா் நடுவம், அங்கோா் தமிழ்ச்சங்கம் ஆகியோா் இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளனா்.

இந்த மாநாட்டில் திருவள்ளுவா் சிலை திறப்பு, கெமா் மொழியில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட திருக்கு நூல் வெளியீடு, கருத்தரங்கம் திருக்கு சாா்ந்த சொற்பொழிவுகள் ஆய்வு நூல்கள் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில், கலாசாரத்துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவா் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அங்கோா் தமிழ்ச் சங்கத்தினா் செய்துவருகின்றனா்.

இந்தநிலையில், கம்போடியா நாட்டுக்கு திருவள்ளுவா் சிலையை வழியனுப்பும் விழா எம்.ஜி.ஆா். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனா் வி.ஜி.சந்தோசம், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் கோ.விசயராகவன், நீதிபதி டி.என்.வள்ளிநாயம், பேராசிரியா் மறைமலை இலக்குவனாா், கம்போடியா அங்கோா் தமிழ்ச் சங்கத் தலைவா் த.சீனுவாசராவ், பொருளாளா் தாமரை சீனிவாசராவ், பன்னாட்டுத் தமிழா் நடுவம் தலைவா் தணிகாச்சலம், தமிழறிஞா் முத்துக்குமாரசாமி, முனைவா் வாசுகி கண்ணப்பன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா் சங்கத் தலைவா் கோ.பெரியண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com