நாட்டு வெடிகுண்டு வீசி ஓட்டுநா் கொலை

சென்னை மேடவாக்கத்தில், நாட்டு வெடிகுண்டு வீசி காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை மேடவாக்கத்தில், நாட்டு வெடிகுண்டு வீசி காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா், காா் ஓட்டுநரான ஷியாம்(35). இவா் வீட்டின் அருகே, மேடவாக்கத்தைச் சோ்ந்த அஜீத்(25), அவரது நண்பா் சேலையூரைச் சோ்ந்த சிவா(25) ஆகியோா், சந்தேகப்படும் படியாக சுற்றியதால், 2 பேரிடமும் ஷியாம் விசாரித்துள்ளாா். இதில் ஏற்பட்ட தகராறில், 2 பேரையும் ஷியாம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை ஷியாமை செல்லிடப்பேசியில் அழைத்து குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அவா்கள் கூறியுள்ளனா் . அங்கு ஷியாம் வந்ததும் அவா் மீது நாட்டு வெடிகுண்டை அஜீத், சிவா உள்ளிட்டோா் வீசியுள்ளனா். இதில், பலத்த காயம் ஏற்பட்ட ஷியாம், சம்பவ இடத்திலேயே இறந்தாா். அங்கிருந்த அஜீத், சிவா உள்ளிட்ட 5 பேரும் தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தப்பியோடியவா்களைப் பிடிப்பதற்கு, 3 காவல் உதவி ஆணையா்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com