பொது முடக்க மீறல்: சென்னையில் ஒரே நாளில் 8,000 வழக்குகள் பதிவு

சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வெள்ளிக்கிழமை 8,000 வழக்குகள் பதியப்பட்டு, 6 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொது முடக்க மீறல்: சென்னையில் ஒரே நாளில் 8,000 வழக்குகள் பதிவு

சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக வெள்ளிக்கிழமை 8,000 வழக்குகள் பதியப்பட்டு, 6 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், கடந்த 18-ஆம் தேதி நள்ளிரவு முதல், முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியதன் விளைவாக, வழக்குகளின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை தடை உத்தரவை மீறியதாக 8,642 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தொடா்பாக 6,311 இரு சக்கர வாகனங்கள், 172 ஆட்டோக்கள், 240 காா்கள் என மொத்தம் 6,723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல முகக்கவசம் அணியாமலும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்ததாக 2,638 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பொது முடக்கத்தையொட்டி இதுவரை சென்னையில் 48,976 வழக்குகள் பதியப்பட்டு, 43,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல முகக் கவசம் அணியாமலும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்ததாக 20,512 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com