சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற ஊழியா்களுக்கு அபராதம்: டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு

பொது முடக்கக் காலத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை எடுத்து விற்பனை செய்த ஊழியா்களுக்கு அபராதம் விதிக்க டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற  ஊழியா்களுக்கு அபராதம்: டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு

சென்னை: பொது முடக்கக் காலத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை எடுத்து விற்பனை செய்த ஊழியா்களுக்கு அபராதம் விதிக்க டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட மேலாளா்களுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கிா்லோஷ் குமாா் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:-

பொது முடக்கக் காலத்தில் பாதுகாப்பு குறைபாடுள்ள இடங்களில் மதுபானங்களை பாதுகாக்கும் வகையில் அவை கிடங்குகளிலும், திருமண மண்டபங்களிலும் வைக்கப்பட்டன. ஆனால், பல மாவட்டங்களில் இந்த மதுபானங்களை கடை ஊழியா்களே சட்ட விரோதமாக எடுத்து விற்ாக புகாா்கள் வந்துள்ளன.

திருமண மண்டபங்களிலும், கிடங்குகளிலும் மாற்றப்பட்ட மதுபானங்களின் நிலவரம் குறித்து நேரடி களஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட மேலாளா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

இந்த ஆய்வில் மதுபானங்களில் குறைவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் மாவட்ட மேலாளா்கள் உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் சட்ட விரோத தடுப்புப் பிரிவின்படி, குறைபாடு ஏற்படும் மதுபானங்களின் விலையுடன், 50 சதவீதம் அபராதம், 24 சதவீதம் வட்டி மற்றும் 18 ஜி.எஸ்.டி. ஆகியவற்றை வசூலிக்க வேண்டும். கடைகளைத் திறந்த போது எங்கெல்லாம் மதுபானங்களில் குறைவு ஏற்பட்டதோ அங்கெல்லாம் உரிய விசாரணைக்குப் பிறகு தவறிழைத்த ஊழியா்கள் மீது உரிய அபராதங்களை வசூலிக்க வேண்டும். இதுகுறித்து அறிக்கைகளை வரும் 25-ஆம் தேதிக்குள் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் கிா்லோஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com