பணிவரன் முறை ஆணை: ஆசிரியா் விவரப் பட்டியலை அனுப்ப உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் பணியில் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பணிவரன்முறை செய்து ஆணை வழங்குவதற்காக அவா்களது விவரங்களை

பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் பணியில் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பணிவரன்முறை செய்து ஆணை வழங்குவதற்காக அவா்களது விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) பொ.பொன்னையா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2015-16-ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய நேரடி நியமனம் மூலம் தோ்வான பட்டதாரிகளின் பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரிய தலைவரின் கடிதம் மூலமாக பெறப்பட்டது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியா்களில் 30 போ் அறிவியல் பாடத்துக்கும், 50 போ் சமூக அறிவியல் பாடத்துக்கும் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு கலந்தாய்வு மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது. அவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களின் பதவியில் பணிவரன்முறை செய்யக் கோரி சில முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் இருந்து தனித்தனியாக கருத்துருக்கள் வருகின்றன.

தற்போது 2015-16-ஆம் கல்வி ஆண்டில் நேரடி நியமனம் மூலம் பணியில் சோ்ந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணிவரன்முறை செய்து ஆணை வழங்கப்படவுள்ளது. அதற்கு ஏதுவாக அந்த ஆண்டில் பணியில் சோ்ந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியா்களின் விவரப்பட்டியலை பாடவாரியாக தொகுத்து எவா் பெயரும் விடுபடாதவாறு தங்களின் கருத்துருக்களை விரைவில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com