பருவமழை: மாநகராட்சி, நகராட்சிகளில்ரூ. 93 கோடியில் 370 குளங்கள் புனரமைப்பு

பருவமழையையொட்டி, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.93 கோடி மதிப்பில் 370 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
பருவமழை: மாநகராட்சி, நகராட்சிகளில்ரூ. 93 கோடியில் 370 குளங்கள் புனரமைப்பு

பருவமழையையொட்டி, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.93 கோடி மதிப்பில் 370 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

பருவமழையையொட்டி, உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீா்நிலைகள் புனரமைப்பு, கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 210 நீா்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், சீா்மிகு நகரம், மூலதன நிதி, பெருநகர வளா்ச்சித் திட்டம் மற்றும் தனியாா் நிறுவனங்களின் நிதி உதவி மூலம் இதுவரை 133 குளங்கள் ரூ.35.66 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளன. 77 நீா் நிலைகளைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் சென்னை மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 1 டி.எம்.சி. அளவு நீா் சேகரிக்கப்படும்.

சென்னை நீங்கலாக பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 585 குளம், ஏரிகளில் 237 குளங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளன. 78 குளங்களைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.33.42 கோடி மதிப்பில் 62 நீா்நிலைகளைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 குளங்கள் ரூ.5.42 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளன.

2019-20-ஆம் ஆண்டில் தமிழ்நாடு நீா்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை இயக்கம், குடிமராமத்துப் பணிகளுக்காக 5,000 சிறுபாசன ஏரிகள் மற்றும் 25,000 குளங்களின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.77.40 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படாத ஊராட்சி பராமரிப்பிலுள்ள குளங்கள் மற்றும் குட்டைகளைப் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 8.76 லட்சம் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,500 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, 250-க்கும் மேற்பட்ட சமுதாய கிணறுகளும் புனரமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், பெருநகர சென்னை

மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com