தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை:முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை வழங்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை வழங்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தனியாா் பள்ளிகள் இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான 25 சதவீத ஒதுக்கீடு சோ்க்கைக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்.25-ஆம் தேதி வரை நடைபெற்றது.

விண்ணப்பித்தவா்களில் தகுதியுள்ள குழந்தைகளைத் தோ்வு செய்து பெற்றோா்களின் சம்மதத்துடன் பள்ளியில் சோ்க்கை செய்ததை உறுதியான பின்னா் எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது அந்த பணி முடிந்துவிட்டதை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் உறுதிசெய்து அதற்குரிய சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான காலியிட விவரங்கள் எமிஸ் தளத்தில் வழங்கப்படும். எனவே, முதன்மைக் கல்வி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com