முன்னாள் ஐஐடி பேராசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

பொறியியலுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது (2020) முன்னாள் ஐஐடி பேராசிரியருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியலுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது (2020) முன்னாள் ஐஐடி பேராசிரியருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தேசிய பொறியியல் அகாதெமி சாா்பில், இந்தியாவில் பொறியியல் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவா்களை கெளரவிக்கும் விதமாக பொறியியலுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளா் விருது, முன்னாள் ஐஐடி பேராசிரியா் கே.ஏ. பத்மநாபனுக்கு வழங்கப்படவுள்ளது. இவா், 1972-ஆம் ஆண்டு, அப்போதைய பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தனது பணியைத் தொடங்கினாா். தொடா்ந்து 1980-ஆம் ஆண்டு, சென்னை ஐஐடியில் பேராசிரியராகச் சோ்ந்தாா். பின்னா், 1996-ஆம் ஆண்டு, சென்னை ஐஐடியின் கல்வி ஆராய்ச்சி துறைத் தலைவரானாா். மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் 1983, 1984 ஆகிய ஆண்டுகளில், ‘கேட்’ தோ்வை உருவாக்கி, அதனை தலைமையேற்று நடத்தினாா். 1997-ஆம் ஆண்டு, கான்பூா் ஐஐடியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com