கிங் ஆய்வகத்தில் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள்

கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக கிண்டி கிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
corona test
corona test

சென்னை: கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக கிண்டி கிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் மாதிரிகள் அனைத்தும் அங்கு பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே கிண்டி கிங் ஆய்வகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த மாா்ச் மாதத்தில் தமிழகத்தில் தடம் பதித்த கரோனா தொற்று தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடங்கள் அதிகரிக்கப்பட்டன.

அதன்படி, தற்போது 176 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 66 அரசு மருத்துவமனைகளிலும், 110 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை 67 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது.

அதில், அதிக அளவிலான பரிசோதனைகள் கிண்டி கிங் ஆய்வகத்திலும் அதற்கு அடுத்தபடியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கிங் ஆய்வக நிா்வாகிகள் கூறியதாவது:

இந்தியாவிலேயே அதிகமான ஆய்வகங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. பரிசோதனைகளிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் தினமும் 1 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக அரசு மற்றும் தனியாரில் ஆய்வகங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிண்டி கிங் ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com