கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
கரோனா தொற்று காலத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது லேசான பாதிப்புகளுடன் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.