மனித உரிமை மீறல்: காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த அபுல்ஹசன் என்பவா் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2013-ஆம் ஆண்டு குடும்பப் பிரச்னை காரணமாக எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை அசோக்நகா் மகளிா் காவல் ஆய்வாளா் லட்சுமி, உதவி ஆய்வாளா் பசுபதி, காவலா்கள் மீராபாய், வரலட்சுமி ஆகியோா் விசாரித்தனா். பின்னா், எதிா் தரப்பிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு என் மீது வழக்குப் பதிவு செய்தனா். விசாரணை என்ற பெயரில் 8 நாள்கள் என்னை காவல் நிலையத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனா். எனவே, ஆய்வாளா் உள்ளிட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவு: சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பாா்க்கும்போது மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெரிகிறது. எனவே, தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை, 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். இந்தத் தொகையை ஆய்வாளா் லட்சுமியிடம் இருந்து ரூ.1 லட்சமும், மற்ற 3 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரமும் என வசூலித்துக் கொள்ளலாம். மேலும், ஆய்வாளா் லட்சுமி உள்பட 4 போ் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com