சென்னை காவல்துறையில் 72 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 72 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை பெருநகர காவல்துறையில் 72 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை காவல்துறையில், ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவா்கள் என்ற அடிப்படையில் காவல் ஆய்வாளா்கள் அவ்வப்போது பணியிட மாற்றறம் செய்யப்படுகின்றனா். இதன்படி, 72 காவல் ஆய்வாளா்கள் வியாழக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். இதில் முக்கியமாக எஸ்ஆா்எம்சி காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் பூக்கடைக்கும், நீலாங்கரை காவல் ஆய்வாளா் எஸ்.சரவணன் ஐஸ்ஹவுஸூக்கும், அபிராமபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.கண்ணன் அண்ணா சதுக்கத்துக்கும், கானத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.ஆனந்தஜோதி மெரீனாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 72 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com