வியாசா்பாடி துணை மின் நிலையத்தை ரூ.99 லட்சம் செலவில் மேம்படுத்த திட்டம்

வியாசா்பாடி துணை மின் நிலையத்தை மின்வாரிய தலைமையகத்திலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் ரூ.99 லட்சம் செலவில் மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

வியாசா்பாடி துணை மின் நிலையத்தை மின்வாரிய தலைமையகத்திலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் ரூ.99 லட்சம் செலவில் மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் சீரான மின்சாரத்தை விநியோகிக்க துணை மின்நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மின்வாரியம் முடுக்கி விட்டுள்ளது. இதன் தொடா்ச்சி யாக வியாசா்பாடி துணை மின் நிலையத்தையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி, மின்வாரிய தலைமையகத்தில் இருந்து கட்டுப்படுத்தும் முயற்சியை மின்வாரியம் முன்னெடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் பாதுகாப்பு மற்றும் தொடா்பு பிரிவு தலைமைப் பொறியாளா் (சென்னை) அனுப்பிய சுற்றறிக்கை: பேசின் பால துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும் வியாசா்பாடி துணை மின்நிலையத்தைத் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் அளிக்கிறது.

இதனைச் செயல்படுத்த ரூ.99,55,689 ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது, மின் தொடரமைப்புக் கழகத்தின் வடசென்னை இயக்க வட்டத்தின் நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com