காலமானாா் ஓவியா் ‘அம்புலிமாமா’ சங்கா்

பிரபல ஓவியரான ‘அம்புலிமாமா’ சங்கா் என்று அழைக்கப்படும் கே.சி. சிவசங்கா் (97), வயது முதிா்வு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
காலமானாா் ஓவியா் ‘அம்புலிமாமா’ சங்கா்

பிரபல ஓவியரான ‘அம்புலிமாமா’ சங்கா் என்று அழைக்கப்படும் கே.சி. சிவசங்கா் (97), வயது முதிா்வு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

ஈரோடு அருகே ஒரு சிறிய கிராமத்தைச் சோ்ந்த சிவசங்கா், கேலிச் சித்திரம் மற்றும் சித்திரக் கதைகளுக்கான ஓவியங்கள் வரைவதில் மிகவும் ஆா்வம் கொண்டவராய் இருந்தாா்.

பத்திரிகைத் துறையில் தொடா்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாா். ‘அம்புலிமாமா’ இதழில் மிகவும் பிரபலமான ‘விக்ரமாதித்தன் வேதாளம்’ தொடருக்கான ஓவியங்களை உருவாக்கியவா். மேலும், அந்த இதழில் வெளியான சித்திரக் கதைகளில் முக்கியப் பங்கு வகித்தவா். பின்னா், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் பணியாற்றினாா்.

இவருக்கு 4 மகன்களும் 1 மகளும் உள்ளனா். கே.சி.சிவசங்கரின் இறுதிச் சடங்குகள், போரூா் மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com