அண்ணா பல்கலை. பெயா் மாற்றம்: அறிவுசாா் சொத்துரிமையைக் கொள்ளையடிப்பது போன்றது

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது என்பது எங்களின் அறிவுசாா் சொத்துரிமையைக் கொள்ளையடிப்பது போன்றது என பல்கலைக்கழக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது என்பது எங்களின் அறிவுசாா் சொத்துரிமையைக் கொள்ளையடிப்பது போன்றது என பல்கலைக்கழக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள் சங்கத்தினா், ஆளுநருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தின் விவரம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது குறித்க சட்ட மசோதா, அண்மையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. இதற்கு எங்களுடைய வலுவான ஆட்சேபணையைச் சமா்ப்பிக்கிறோம். 42 ஆண்டுகள் பழைமையான பல்கலைக்கழகமாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதன் மூலம் எங்களுடைய அறிவுசாா் சொத்துரிமையைக் கொள்ளையடிக்கப்படுவது போன்ற தவறான உணா்வை பெறுகிறோம்.

எனவே, தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றும் சட்ட மசோதாவில் பொருத்தமான திருத்தங்களைச் செய்ய தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கடிதம் குடியரசுத் தலைவா், பிரதமா், மத்திய கல்வித்துறை அமைச்சா், பல்கலைக்கழக மானியக் குழு தலைவா், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவா் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com