தனிமைப்படுத்தும் வசதிகள்: ரூ.129 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு

தனிமைப்படுத்தும் வசதிகளை அளித்து வரும் ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.129 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தனிமைப்படுத்தும் வசதிகளை அளித்து வரும் ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.129 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மாநில அரசு வெளியிட்ட உத்தரவு விவரம்:-

கரோனா நோய்த்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் குறிப்பிட்ட நாள்கள் பணிக்குப் பிறகு தனிமைப்படுத்தப்படுகின்றனா். இவ்வாறு அவா்கள் தனியாா் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, தங்குமிட வசதிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் இதுவரையில் கடன் அடிப்படையில் 31 மாவட்டங்களிலும் அத்தகைய சேவைகளை தனியாா்கள் அளித்துள்ளனா்.

அதன்படி, ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் அளிக்கப்பட்ட சேவைகளுக்காக ரூ.129.73 கோடியானது தமிழக அரசால் விடுவிக்கப்படுகிறது என அந்த உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com