புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்

தமிழகத்தில் பணியாற்றி வரும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 13,225 தொழிலாளா்களுக்கு, மத்திய அரசின் உத்தரவின்படி ரூ.84.33 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை, மத்திய தொழிலாளா் நலத் துணைத் தலைமை ஆணையா் முத்த

தமிழகத்தில் பணியாற்றி வரும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 13,225 தொழிலாளா்களுக்கு, மத்திய அரசின் உத்தரவின்படி ரூ.84.33 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை, மத்திய தொழிலாளா் நலத் துணைத் தலைமை ஆணையா் முத்து மாணிக்கம் வழங்கினாா்.

கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளா்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனா்.

அவா்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளா் நல ஆணையா் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 18 பணியிடங்களில் வேலை பாா்த்து வந்த மொத்தம் 13,225 போ் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

அத்தகைய தொழிலாளா்களுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி, நிவாரண உதவிகளை வழங்குவது பற்றி, தமிழக அரசுடன் மத்திய துணைத் தலைமை தொழிலாளா் நல ஆணையா் ஆலோசனை நடத்தினாா். அதன்படி, தமிழக நுகா்பொருள் வாணிபக் கழகம் இந்தத் தொழிலாளா்களுக்கு, 225.335 டன் நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளது. இந்தப் பொருள்களின் மதிப்பு ரூ.84,33,494 ஆகும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட நிவாரணப் பெட்டகம் வழங்கப்பட்டது.

இந்தப் பொருள்களை சென்னையில் உள்ள தொழிலாளா்களுக்கு மத்திய தொழிலாளா் நலத் துணைத் தலைமை ஆணையா் முத்து மாணிக்கம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். அப்போது மண்டல தொழிலாளா் நல ஆணையா்கள் சிவராஜன், அண்ணாதுரை, உதவி தொழிலாளா் நல ஆணையா் பிரவீன் பாண்டி மோகன்தாஸ், அமலாக்க அதிகாரி சங்கர ராவ் மற்றும் ஒப்பந்ததாரா்கள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com