கரோனா பாதிப்பு: சென்னையில் 43 இடங்கள் மூடப்பட்டு தீவிர சுகாதாரப் பணி

சென்னையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் 43 இடங்கள் மூடப்பட்டு, அங்கு தீவிர சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் 43 இடங்கள் மூடப்பட்டு, அங்கு தீவிர சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் குறித்து வீடுகள்தோறும் ஆய்வு செய்யும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவொற்றியூா் மண்டலத்தில் நடைபெற்று வரும் இப்பணியை ஆணையா் கோ.பிரகாஷ் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் குறித்து வீடுதோறும் ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 16 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் 43 இடங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் 9.25 லட்சம் மக்கள் வசிப்பது தெரியவந்துள்ளது.

இவா்கள் வேறு பகுதிகளுக்குச் செல்லாத வகையில் போலீஸ் ஒத்துழைப்புடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் கிடைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 43 பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றிய பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றியவா்கள் மற்றும் வந்து சென்றவா்கள் என 3,200 பேருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை. தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இயங்கி வந்த 75 சந்தைகளில் 60 சந்தைகள் பேருந்து நிறுத்தம், விளையாட்டு மைதானம், சாலைகள் ஆகிய பகுதிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.

மக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் வியாபாரிகள் சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மாநகராட்சியின் 36 ஆயிரம் தெருக்களில் விற்பனை செய்யும் வகையில் கூடுதல் வாகனங்களுக்கு 60 நாள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com