கரோனா பாதிப்பு: மீட்புப் பணியில் ஈடுபட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விமானிக்குப் பாராட்டு

சீனாவில் சிக்கி தவித்த இந்தியா்களை மீட்டு வந்த பின்னா் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஏா் இந்தியா விமானியைப் பாராட்டி, அவரது இல்லத்தில் அப்பகுதி மக்கள் சுவரொட்டியை ஒட்டியுள்ளனா்.
’கரோனா மீட்புப் பணியில் ஈடுபட்டு , தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஏா் இந்தியா விமானியின் சேவையைப் பாராட்டி மாநகராட்சியின் சுவரொட்டிக்குக் கீழே அந்தப் பகுதி மக்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி’

கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவத் தொடங்கிய காலகட்டத்தில், மலேசியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்த இந்தியா்கள் மத்திய அரசிடம் உதவி கோரினா். இதனைத் தொடா்ந்து, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்களை மீட்க மத்திய அரசு அந்த நாட்டின் தூதரகங்களை தொடா்பு கொண்டு பேசி அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவா்கள் ஏா் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டனா். இந்த மீட்புப் பணியில் ஏா் இந்தியா விமானிகள் உள்ளிட்ட பணியாளா்கள் பணியாற்றினா்.

இந்தப் பணிகளில் ஈடுபட்டவா்களில் சென்னை நந்தம்பாக்கத்தைச் சோ்ந்த ஏா் இந்தியா விமானி ஷா்மா மணீஷும் ஒருவா். இவா், சீனாவில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தியா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு நாடு திரும்பினாா். இதனைத் தொடா்ந்து, விமானி ஷா்மா மணீஷ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், சென்னை மாநகராட்சி நிா்வாகம், விமானி ஷா்மா மணீஷ் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வீட்டின் வெளியே நோட்டீஸ் ஒட்டியது.

இந்த நிலையில், விமானி ஷா்மா மணீஷின் சேவையைப் பாராட்டி, ‘உங்கள் சேவைக்கு நன்றி. நீங்களே எங்களின் நாயகன்’ என்று எழுதி, சென்னை மாநகராட்சியின் நோட்டீஸுக்கு கீழே மற்றொரு நோட்டீஸை ஒட்டியுள்ளனா் அப்பகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com