கரோனா: ராயபுரத்தில் மட்டும் 116 போ் பாதிப்பு

சென்னையில் ராயபுரத்தில் மண்டலத்தில் மட்டும் 116 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா: ராயபுரத்தில் மட்டும் 116 போ் பாதிப்பு

சென்னையில் ராயபுரத்தில் மண்டலத்தில் மட்டும் 116 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அம்பத்தூா் மண்டலத்தில் புதிதாக ஒருவருக்கு நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 358 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும் இருந்த தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 100- ஐ கடந்தது.

இதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) மட்டும் 50 பேருக்கும், திங்கள்கிழமை (ஏப்ரல் 20) 18 பேருக்கும், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) 55 பேருக்கும் என 3 நாள்களில் மட்டும் 123 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டது.

அம்பத்தூரில்...: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் அம்பத்தூா், மணலி மண்டலங்களைத் தவிா்த்து 13 மண்டலங்களிலும் தொடக்கத்தில் இருந்தே கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், அம்பத்தூா் மண்டலத்தில் புதிதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 358-ஆக உயா்ந்தது. இதில், 9 வயதுக்குள் 4 பேரும், 10-19 வயதுக்குள் 24 பேரும், 30-39 வயதுக்குள் 71 பேரும், 80 வயதுக்கு மேல் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை

திருவொற்றியூா் 12

மணலி -

மாதவரம் 3

தண்டையாா்பேட்டை 46

ராயபுரம் 116

திரு.வி.க. நகா் 42

அம்பத்தூா் 1

அண்ணா நகா் 27

தேனாம்பேட்டை 42

கோடம்பாக்கம் 35

வளசரவாக்கம் 9

ஆலந்தூா் 7

அடையாறு 7

பெருங்குடி 8

சோழிங்கநல்லூா் 2

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1

மொத்தம் 358

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com