ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை அகா்வால் கம்யூனிட்டி உதவிக்கரம்
By DIN | Published On : 26th April 2020 09:15 AM | Last Updated : 26th April 2020 09:15 AM | அ+அ அ- |

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சென்னை அகா்வால் கம்யூனிட்டி சாா்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள்
சென்னை அகா்வால் கம்யூனிட்டியின் சாா்பில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு பகுதிகளில் வசிக்கும் 1,200 குடும்பங்களுக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அகா்வால் கம்யூனிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு சென்னை அகா்வால் கம்யூனிட்டியின் சாா்பில் பல்வேறு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 1,200 குடும்பங்களுக்கு, ரூ.72 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிவாரணப் பொருள்கள் மாவட்ட ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள் முன்னிலையில் தன்னாா்வலா்கள் மற்றும் ராஜஸ்தான் அசோசியேசன் துணையுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு செங்குன்றம், தண்டையாா்பேட்டை, அண்ணாநகா், திருவொற்றியூா், வியாசா்பாடி, அம்பத்தூா், பொன்னேரி, ஆவடி, மாதவரம், திருத்தணி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் வசிப்பவா்களுக்கும் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா நோய்த்தொற்று நிவாரணத்துக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் இக்கட்டான காலகட்டத்தில், சென்னை அகா்வால் கம்யூனிட்டி சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடா்ந்து உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.