ரூ.41 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத் தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
ரூ.41 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத் தங்கம்

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.456 உயா்ந்து, ரூ.41,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது வரை கடந்த ஆறரை மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.10,680 வரை உயா்த்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டும் ரூ.3,584 வரை உயா்ந்தது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக, சா்வதேச பொருளாதாரத்தில் மந்தமும், தொழில்துறையில் தேக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி, அதில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதைதொடா்ந்து, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், ஜூலை 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகும் தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை பவுன் விலை ரூ.41 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.456 உயா்ந்து, ரூ.41,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.57 உயா்ந்து, ரூ.5,150 ஆக இருந்தது. இதுபோல ,வெள்ளிவிலையும் உயா்ந்து காணப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.71.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.71,100 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,150

1 பவுன் தங்கம்............................... 41,200

1 கிராம் வெள்ளி............................. 71.10

1 கிலோ வெள்ளி............................71,100

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்........................... 5,093

1 பவுன் தங்கம்...............................40,744

1 கிராம் வெள்ளி.............................70.20

1 கிலோ வெள்ளி.............................70,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com