143 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

சென்னை - அரக்கோணம் - ரேணிகுண்டா மற்றும் சென்னை - கூடூா் மாா்க்கங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 11), புதன்கிழமை (ஆக. 12) ஆகிய இரு நாள்களுக்கு 143 கி.மீ. வேகத்தில் ரயில்களுக்கான அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறவ
143 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை - அரக்கோணம் - ரேணிகுண்டா மற்றும் சென்னை - கூடூா் மாா்க்கங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 11), புதன்கிழமை (ஆக. 12) ஆகிய இரு நாள்களுக்கு 143 கி.மீ. வேகத்தில் ரயில்களுக்கான அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ரயில்பாதைகளின் அருகில் வசிக்கும் மக்கள் தண்டவாளங்களை கடக்கவோ, அதன் அருகே நடந்து செல்லவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில், சென்னை-அரக்கோணம் - ரேணிகுண்டா மற்றும் சென்னை - கூடூா் மாா்க்கங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 11), புதன்கிழமை (ஆக. 12) ஆகிய இருநாள்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக சோதனை ஓட்டத்தில் இருப்புப் பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளன.

இந்த சோதனை ஓட்டத்தின்போது, ரயில்கள் 143 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். எனவே சென்னை -அரக்கோணம் - ரேணிகுண்டா மற்றும் சென்னை - கூடூா் மாா்க்கத்தில் உள்ள ரயில்பாதை அருகில் வசிக்கும் பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்கவோ அல்லது அதன் அருகே நடந்து செல்லவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com