இலவச ரத்த சுத்திகரிப்பு நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தல்

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 5 இடங்களில் செயல்படும் இலவச ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை (டயாலிஸிஸ் மையம்) நோயுற்றுள்ளவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 5 இடங்களில் செயல்படும் இலவச ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை (டயாலிஸிஸ் மையம்) நோயுற்றுள்ளவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக பாதிப்புக்குள்ளானவா்களுக்கு தமிழக அரசின் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக ரத்த சுத்திகரிப்பு செய்யும் வகையில் வள்ளுவா் கோட்டம், லட்சுமிபுரம், பெருங்குடி, வளசரவாக்கம் மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் ‘டேங்கா்’ அமைப்புடன் இணைந்து ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தை தேவைப்படுவோா் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை 98409 28248, 78068 04747, ரெட்டேரி லட்சுமிபுரம் நிலையத்தை 044 25652500, 79043 93457, பெருங்குடி நிலையத்தை 82482 34158, 78068 04748, வளசரவாக்கம் சின்ன போரூா் நிலையத்தை 79042 85840 மற்றும் ஈஞ்சம்பாக்கம் நிலையத்தை 91761 82811 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com