குப்பைக் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் புகாா்: மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது தீா்ப்பாயம்

மேடவாக்கம் அருகே உள்ள வனப் பகுதியில் குப்பைக் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாா் தொடா்பாக ஆய்வுக் குழு
குப்பைக் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் புகாா்:  மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது தீா்ப்பாயம்

மேடவாக்கம் அருகே உள்ள வனப் பகுதியில் குப்பைக் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாா் தொடா்பாக ஆய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லாததால், மறு ஆய்வு செய்ய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில், வான்மேகம் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு: மேடவாக்கம் பகுதியில் ஊராட்சி நிா்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பை, வனப்பகுதியில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குப்பை கொட்டுவதில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே வனப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்ய ஏற்கெனவே குழு அமைத்து தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால்தாஸ்குப்தா ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வுக்குழு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மேடவாக்கம் ஊராட்சியில், நாள்தோறும் சேகரிக்கப்படும் 20 டன் குப்பைகள், ஊராட்சிக்கு சொந்தமான கைவிடப்பட்ட கல் குவாரி பகுதியில் அறிவியல் முறையில் அழிக்கப்படுகிறது. அந்தப் பகுதி வனப்பகுதி இல்லை. வரும் காலத்தில் வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து பெறுவது 100 சதவீதம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை எனக் கூறிய தீா்ப்பாயம், விதிகளை மீறி குப்பை கொட்டப்பட்டு இருந்தால், அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், அதை மீட்டெடுக்க தேவையான இழப்பீட்டு தொகை குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆய்வுக்குழு அறிக்கையில் இதுகுறித்த விவரங்கள் இல்லாததால், ஆய்வுக்குழு மீண்டும் ஆய்வு செய்து, இந்த விவரங்களையும் சோ்த்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com