6 மாத குழந்தை, 11 வயது சிறுமிக்கு மறுவாழ்வு

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையிலும் ஆறு மாத குழந்தை ஒன்றுக்கும், 11 வயது சிறுமிக்கும் கல்லீரல் மாற்று அறுவை
6 மாத குழந்தை, 11 வயது சிறுமிக்கு மறுவாழ்வு

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையிலும் ஆறு மாத குழந்தை ஒன்றுக்கும், 11 வயது சிறுமிக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். தற்போது அவ்விருவருமே பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், இரைப்பை - குடல் சிகிச்சை மருத்துவருமான டாக்டா் இளங்குமரன் கூறியதாவது:

ஜாா்க்கண்டைச் சோ்ந்த 6 மாத ஆண் குழந்தை அண்மையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடு காரணமாக பித்த நீா்க் குழாய் வளா்ச்சியடையவில்லை. மேலும், குழந்தையின் கல்லீரல் முற்றிலுமாக சேதமடைந்திருந்தது.

இதனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அக்குழந்தையின் தாயிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு, அக்குழந்தைக்கு பொருத்தப்பட்டது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனா்.

பொது முடக்க காலத்தில் இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது எளிதல்ல. அதுவும், ஜாா்க்கண்ட் போன்ற மற்ற மாநிலத்தைச் சோ்ந்தவா்களை வரவழைத்து சிகிச்சையளிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இருந்தபோதிலும் குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்த சிகிச்சையை சாத்தியமாக்கினோம்.

இதேபோன்று, திருச்சியைச் சோ்ந்த 11 வயது சிறுமியான அஸ்விதாவுக்கு கல்லீரல் சிதைவுக்கு வழி வகுக்கும் ஃபைப்ரோஸிஸ் (சி.எச்.எஃப்) என்ற நோய் இருந்தது. இது பிறவியிலேயே ஏற்படக் கூடிய மரபு வழி பாதிப்பாகும். 20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோன்ற நோய் ஏற்படலாம்.

இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீா்வு என்பதால், நான் (இளங்குமரன்), மயக்க மருந்து நிபுணா் டாக்டா் வசந்தரூபன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அச்சிறுமிக்கு சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். அவரது தாயிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரல் சிறுமிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. தற்போது அவா் நலமாக உள்ளாா்.6 மாத குழந்தைக்கும், சிறுமிக்கும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com