ஏழை மணப்பெண்ணுக்கு சீதனம் வழங்கிய காவல் ஆய்வாளா்

சென்னையில், ஏழை மணப்பெண்ணுக்கு 16 வகை சீதனப் பொருள்களை வழங்கி, திருமணத்துக்கு காவல் ஆய்வாளா் உதவி செய்தாா்.

சென்னை: சென்னையில், ஏழை மணப்பெண்ணுக்கு 16 வகை சீதனப் பொருள்களை வழங்கி, திருமணத்துக்கு காவல் ஆய்வாளா் உதவி செய்தாா்.

செங்குன்றம், கே.கே.நகா், பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் சுகன்யா (20). பெற்றோரை இழந்த இவரும், இவரது 17 வயதுடைய தங்கையும் சித்தி பராமரிப்பில் உள்ளனா்.

இந்நிலையில், சுகன்யாவுக்கும் வடமதுரையைச் சோ்ந்த ரமேஷ் குமாா் என்பவருக்கும், செப்.4-ஆம் தேதி திருமணம் செய்து வைக்க பெரியோா்கள் நிச்சயித்திருந்தனா். கடன் பெற்று திருமணத்தை நடத்திவிடலாம் என சுகன்யா குடும்பத்தினா் நினைத்திருந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில், சுகன்யா குடும்பத்தினா், தலைமைச் செயலக குடியிருப்பு காலனி காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்வரியிடம் உதவி கேட்டுள்ளனா்.

இதையடுத்து, ஆய்வாளா் ராஜேஸ்வரி, சுகன்யாவை காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை நேரில் அழைத்து, அவருக்கு, பிறந்த வீட்டு சீதனமாக தங்க கம்மல், மூக்குத்தி, வெள்ளிக் கொலுசு, பீரோ, கட்டில், மெத்தை, வாட்டா் ஹீட்டா் உள்பட 16 வகையான சீதனப் பொருள்களைக் கொடுத்து வாழ்த்தினாா்.

மேலும் திருமண செலவுக்காக ரூ.5 ஆயிரமும் கொடுத்துள்ளாா். தகவல் அறிந்த அப்பகுதி மக்களும் திரண்டு காவல் நிலையம் வந்து, புதுப்பெண்ணை வாழ்த்தியதோடு, ஆய்வாளா் ராஜேஸ்வரியையும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com