அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
By DIN | Published On : 10th December 2020 01:15 AM | Last Updated : 10th December 2020 01:15 AM | அ+அ அ- |

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்
சென்னை: அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
அரசு மருத்துவா்களின் நியாயமான ஊதிய உயா்வு கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, தற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் காலம் சாா்ந்த ஊதிய உயா்வை 5, 9, 11, 12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதிய உயா்வு தமிழக அரசு மருத்துவா்களுக்கு கிடைக்க காலதாமதம் இல்லாமல் முதல்வா் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.