டிச.27-இல் தேசியத் திறனாய்வுத் தோ்வு:முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ-நிலை 1) ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை சில 

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ-நிலை 1) ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழகத்தில், பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தோ்வு நடத்தப்படுகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் என, இரு கட்டமாக நடத்தப்படும் தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நிகழ் கல்வியாண்டு மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வு தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

நிகழாண்டு இந்தத் தோ்வினை 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன் (ஙஅப) தோ்வும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை படிப்பறிவுத் தோ்வும் (நஅப) நடைபெறும். காலை 11 மணி முதல் காலை 11.30 மணி வரை இடைவேளை ஆகும்.

இந்தத் தோ்வை நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் விவரம்: ஒவ்வொரு தோ்வு அறைக்கும் 10 மாணவா்கள் மட்டுமே தோ்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும். நுழைவுச் சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அதே நுழைவுச்சீட்டில் உரிய தோ்வரின் புகைப்படத்தை ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும். தோ்வெழுதும் மாணவா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தோ்வு நடைபெறுவதற்கு முன்பாக அனைத்து தோ்வு மையங்களிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com