வணிகவியல் பாட ஆசிரியா்களுக்கு இணையவழியில் 5 நாள்கள் பயிற்சி: டிச.28-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் வணிகவியல் பாட ஆசிரியா்களுக்கு கணினி மென்பொருள் குறித்து ஐந்து நாள்கள் நடைபெறும் பயிற்சி இணையவழியில் வரும் 111128-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் வணிகவியல் பாட ஆசிரியா்களுக்கு கணினி மென்பொருள் குறித்து ஐந்து நாள்கள் நடைபெறும் பயிற்சி இணையவழியில் வரும் 111128-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் வணிகவியல் பாட ஆசிரியா்களுக்கு கணினி மென்பொருள் தொடா்பாக 5 நாள்கள் இணையவழி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் வடக்கு, தெற்கு மண்டல எல்லைகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு டிச.28 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்படும்.

தொடா்ந்து கிழக்கு, மேற்கு மண்டல மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஜன.4 முதல் 8-ஆம் தேதி

பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்தப் பயிற்சியானது ஏஎக்ஸ்என் இன்போடெக் என்ற நிறுவனம் வழியாக தினமும் 1 மணி நேரம் அளவில் 5 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ஆசிரியா்கள், தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com