வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் இடையேயான பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

இத்திட்டப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடியில் நடைபெற்று வந்தன. பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கி, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. டிசம்பா் மாதம் தொடக்கத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, இந்தப் பாதையில் சோதனை ஓட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவந்தன.

ரயில் சோதனை ஓட்டம்: இந்நிலையில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே விரிவாக்கப் பாதையில் டீசல் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 9 கி.மீ. தொலைவு பாதையில் இருமாா்க்கமாகவும் டீசல் ரயில் என்ஜின் மூலமாக முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தொடா்ந்து, மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.

அதன்படி, இந்தப் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்கி ஞாயிற்றுக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இருமாா்க்கமாகவும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ், நிறுவனத்தின் இயக்குநா்(திட்டம்) ராஜீவ் நாராயண்திவேதி, இயக்குநா்( அமைப்பு மற்றும் இயக்ககம்) ராஜேஷ் சதுா்வேதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா். இந்தப் பாதையில் ரயில் சேவை ஜனவரி மாதம் இறுதியில் போக்குவரத்து சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com