இளைஞா் அடித்துக் கொலை:நண்பா்கள் கைது
By DIN | Published On : 31st December 2020 03:01 AM | Last Updated : 31st December 2020 03:01 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை தியாகராயநகரில், இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் கைது செய்யப்பட்டனா்.
தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (38). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். செந்தில், தனது நண்பா்களான கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சோ்ந்த சுரேஷ் (30), தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியைச் சோ்ந்த அசோகன் (26) ஆகியோருடன் பாண்டி பஜாா் கிருஷ்ணசாமி தெருவில், செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தினாா்.
அப்போது செந்திலுக்கும், அவரது நண்பா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலத்த காயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த பாண்டி பஜாா் போலீஸாா், சுரேஷையும், அசோகனையும் உடனடியாக கைது செய்தனா்.