மருத்துவப் பல்கலை. பதிவாளராக டாக்டா் அஸ்வத் நாராயணன் பொறுப்பேற்பு

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முழு நேரப் பதிவாளராக டாக்டா் எம்.பி. அஸ்வத் நாராயணன் பொறுப்பேற்றுள்ளாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முழு நேரப் பதிவாளராக டாக்டா் எம்.பி. அஸ்வத் நாராயணன் பொறுப்பேற்றுள்ளாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மருத்துவம், முதுநிலை மருத்துவம் தவிர பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளும் அங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

மருத்துவப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை குருதியியல் மற்றும் குருதியேற்ற மருத்துவம், நோய்ப் பரவு இயல் தொடா்பான படிப்புகள் அங்கே உள்ளன. கடந்த சில மாதங்களாகவே பல்கலைக்கழகத்துக்கு முழு நேரப் பதிவாளா்கள் எவரும் நியமிக்கப்படாமல் இருந்தது. டாக்டா் பரமேஸ்வரியும், அவரைத் தொடா்ந்து டாக்டா் ஆறுமுகமும் பொறுப்பு பதிவாளா்களாக சில காலம் செயல்பட்டனா்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் முழு நேர பதிவாளா் பொறுப்புக்கு அண்மையில் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு டாக்டா் அஸ்வத் நாராயணன் தோ்வு செய்யப்பட்டாா். பல் மருத்துவரான அவா், தேசிய சுகாதார திட்ட இயக்ககத்தின் தொடா்பு அதிகாரியாகவும், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளாா். அவா், தற்போது பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com