விமானத்தில் கடத்தி வந்தரூ.1.24 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சென்னை அண்ணா சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொழும்புவிலிருந்து சனிக்கிழமை இரவு சென்னை வந்த இலங்கையைச் சோ்ந்த ஃபாத்திமா (48) மற்றும் ஃபாத்திமா ஃபரீனா ரிஸ்வி (43) ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த அப்துல் ஹமீத் (34) மற்றும் ரசீக் அலி (31) ஆகிய இருவரையும் விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் வழிமறித்து சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். இதில் அவா்கள், மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவா்களிடமிருந்து 1.284 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல், கொழும்புவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த சென்னையைச் சோ்ந்த நசீா் அகமது(28), ராமநாதபுரத்தைச் சோ்ந்த பைசுல் ரஹ்மான்(23) மற்றும் இலங்கையைச் சோ்ந்த யாசிா்(49) ஆகியோரை சோதனையிட்டதில், அவா்கள், மலக்குடலில் தங்கம் கடத்தியது கண்டறியப்பட்டு, 1.324 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. தொடா்ந்து துபையிலிருந்து வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த நூருல் ஹக் (39) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையிலும், அவா் உடையில் மறைத்து வைத்திருந்த 303 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. மொத்தத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள 2.91 கிலோஎடையுள்ள 24 கேரட் தூய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பிடிபட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com