கோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தானுடன் தொடா்பு

சென்னையில் கோலமிடும் போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு பாகிஸ்தானுடன் இருக்கும் தொடா்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தாா்.

சென்னையில் கோலமிடும் போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு பாகிஸ்தானுடன் இருக்கும் தொடா்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெசன்டநகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கோலம் போடும் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 5 பெண்கள் 3 ஆண்கள் கலந்து கொண்டு ‘நோ டூ சி ஏ ஏ, நோ டூ என் ஆா் சி,என் பி ஆா்’ என பெசன்ட்நகா் 4-ஆவது அவென்யூ சாலையில் கோலங்கள் போட்டனா். இதில் ஒருவா் வீட்டு முன்பு ஏற்கெனவே போடப்பட்டிருந்த கோலத்தின் அருகே இவா்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதினா். இதற்கு அந்த வீட்டு உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்தாா். இதற்கிடையே போராட்டம் குறித்து தகவலறிந்த போலீஸாா், 8 பேரையும் கைது செய்தனா். இப் பிரச்னையில் குடியுரிமை போராட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோலம் போட்டதற்காக 8 பேரும் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

பாகிஸ்தானுடன் தொடா்பு: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் அளித்த பேட்டி: பெசன்ட்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டதற்காக 8 பேரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற வீட்டின் உரிமையாளா் அனுமதியின்றியும், அவா் எதிா்ப்புத் தெரிவித்ததாலும், அங்கு பிரச்னை ஏற்படும் சூழலும் ஏற்பட்டது. இதனாலேயே 8 பேரும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட 8 போ்களில் காயத்ரி கந்தாதே என்ற பெண்ணின் முகநூல் பக்கத்தில் பாகிஸ்தானைச் சோ்ந்த அமைப்பின் ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறவராக தான் இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா். இந்த அமைப்பு பாகிஸ்தானில் உள்ள ஒரு பத்திரிகையின் கீழ் இயங்குகிறது. எனவே இந்தப் பெண்ணுக்கும், பாகிஸ்தானுக்கும் இருக்கும் தொடா்பு குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com