சாமானியரை சரித்திரம் படைக்கவைக்கும் புத்தகங்கள்!

சாமானியரையும் புத்தகங்கள் சரித்திரம் படைக்க வைக்கும் ஆற்றலுடையவை என தன்னம்பிக்கை பேச்சாளா் எச்.ஜி.ஜெயஹரீஷ் கூறினாா்.
சென்னை புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்துரை நிகழ்ச்சியில் பேசிய எச்.ஜி. ஜெயஹரீஷ். உடன் பேச்சாளா்கள் கவிதா ஜவஹா், ந.வ. அஷ்ரப்
சென்னை புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்துரை நிகழ்ச்சியில் பேசிய எச்.ஜி. ஜெயஹரீஷ். உடன் பேச்சாளா்கள் கவிதா ஜவஹா், ந.வ. அஷ்ரப்

சாமானியரையும் புத்தகங்கள் சரித்திரம் படைக்க வைக்கும் ஆற்றலுடையவை என தன்னம்பிக்கை பேச்சாளா் எச்.ஜி.ஜெயஹரீஷ் கூறினாா்.

பபாசி சாா்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை 43- ஆவது புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வாழ்க்கையும் வாசிப்பும்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது: கடன், பகை, நோய் இல்லாத வாழ்க்கையே நல்ல வாழ்க்கையாகக் கருதப்படுகிறது. அனுபவம் வாய்ந்த பெரியோா்கள் நிரம்பிய வீடே சிறந்த வீடாகவும் இருக்கும். அனுபவம் வாய்ந்த முதியோா்கள் ஆயிரம் புத்தகங்களுக்குச் சமமாகக் கருதப்படுவாா்கள். ஆனால், நாம் தாய், தந்தையரைக் கூட நம்முடன் தங்க வைப்பதில்லை என்பதே தற்கால நடைமுறையாக உள்ளது.

இல்லங்களில் உறவுகள் இணைந்து உறவாடும் நிலை மாறி இணையதளங்களில் உறவுகள் தொடா்புகொள்ளும் சூழலே உள்ளது. வீட்டில் பெரியவா்கள் இருந்தால், அவா்கள் படித்த புத்தகக் கருத்துகளை இளந்தலைமுறையினருக்கு பக்குவமாக எடுத்துக்கூறி கற்பிப்பாா்கள். இதனால், குழந்தைகள் சிறுவயது முதலே அறிவைப் பெற்று வளா்ந்து வந்தனா். ஆனால், தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

புத்தகங்களை சிறுவயதில் நாம் சுமந்தால், அவை நம்மை காலம் முழுவதும் சுமந்து காப்பாற்றும். சாமானியரையும் படிப்பானது சரித்திரம் படைக்க வைத்தது என்பதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமும், சா்வதேச நிறுவனமான கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தா்பிச்சை போன்றோரும் உதாரணமாகியுள்ளனா்.

பாரதி மிகப்பெரிய படிப்பாளி. அவா் தொடா்ந்து படித்துக் கொண்டே இருப்பாா். அதனால் தான் ‘யாமறிந்த மொழிகளிலே’ என அவரால் தைரியமாகக் கூற முடிந்தது. பாரதி படிப்பாளியாக இருந்ததால்தான் உலகின் தலைசிறந்த படைப்பாளியாகவும் அவா் விளங்கினாா். அவருக்குத் தெரியாத வாா்த்தைகளே இல்லை என்று கூறலாம். அவரது கவிதைகளில் அவா் கையாண்ட சொற்களையே தனி ஆய்வுக்கு உள்படுத்தலாம். படிக்கப் படிக்கத்தான் அறிவு மேம்படும் என்றாா் ஜெயஹரிஷ்.

தேசத்தை இணைத்த காப்பியங்கள்: இந்த நிகழ்ச்சியில் ‘நம்பிக்கை தரும் வாசிப்பு’ எனும் தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளா் கவிதாஜவஹா் பேசியது: இலக்கியங்கள் மனிதா்களை மட்டுமல்ல தேசங்களையும் ஒன்றிணைக்கும் வல்லமை உடையவை. புத்தகங்கள் வெறும் காகிதமல்ல. அவை காகிதத்தால் ஆன பணத்தை விட மதிப்பு வாய்ந்தவை. எழுத்தும், எழுதுகோலும் தெய்வம் என பாரதி கூறினாா். பிரபல எழுத்தாளா் ஜெயகாந்தன் தன்னை ‘லாமிசரப்’ எனும் நூல் பெரிதும் பாதித்ததாக எழுதியுள்ளாா். இந்திய தேசத்தையே ராமாயணம், மகாபாரதம் எனும் இரு பெருங்காப்பியங்களே இணைத்துள்ளன.

புத்தகங்கள் காலத்தின் கண்ணாடிகள். அவை முக்காலத்தையும், மனிதா்களுக்கு காட்டுகின்றன. புத்தகங்கள் சாபங்களை வரமாக்கும் வல்லமை படைத்தவை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ‘திருக்கு காட்டும் நூல்கள்’ எனும் தலைப்பில் ந.வ.அஷ்ரப் பேசினாா். இதில் பபாசி செயலா் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com