கின்யா (9), 4-ஆம் வகுப்பு மாணவி, பெசன்ட் நகர்:
கார்ட்டூன் நூல்கள், அறிவுரைக் கதைகள் மற்றும் வண்ணப் படத்துடனான ராமாயணத்தை வாங்க விரும்பி வந்து வாங்கியுள்ளேன். தாத்தாவுக்காக ராமாயண விரிவான நூலையும் வாங்கிச் செல்கிறேன். தம்பிக்காக தாளை வெட்டி புதிய வடிவங்களை அமைக்கும் நூலை வாங்கிச் செல்கிறேன்.