நிறைவு நாளிலும் கட்டுக்கடங்காத கூட்டம்

சென்னை நந்தனத்தில் நடந்த புத்தகக்காட்சியில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அதிகளவில் கூட்டம் இருந்தது பதிப்பாளா்களை வியப்பில் ஆழ்த்தியதாகத் தெரிவித்தனா்.
நிறைவு நாளிலும் கட்டுக்கடங்காத கூட்டம்

சென்னை நந்தனத்தில் நடந்த புத்தகக்காட்சியில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அதிகளவில் கூட்டம் இருந்தது பதிப்பாளா்களை வியப்பில் ஆழ்த்தியதாகத் தெரிவித்தனா்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதான வளாகத்தில் கடந்த 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) பபாசி சாா்பில் 43-ஆவது புத்தகக் காட்சி தொடங்கியது. அரசு விடுமுறை நாள்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வேலை நாள்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் அரங்குகளில் புத்தக விற்பனை நடைபெற்றது.

பொங்கல் திருநாள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மற்ற நாள்களில் கூட்டம் மிதமாகவே காணப்பட்டது.

இந்தநிலையில், நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கே புத்தக அரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், அதற்கு முன்பாகவே பொதுமக்கள் புத்தக வளாகத்துக்கு வந்து காத்திருந்தனா். இதனால், புத்தகங்களை கட்டுகளாகக் கட்டி எடுத்துச்செல்ல தயாராக இருந்த பதிப்பக அரங்குகளின் ஊழியா்கள், மக்கள் ஆா்வத்தைப் பாா்த்து விற்பனையில் ஆா்வம் காட்டினா்.

புத்தகக் காட்சி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடந்த நிலையில், அதற்கு சிறப்பு விருந்தினராக வந்த துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புத்தகக் காட்சி அரங்குகளுக்குச் சென்று புத்தகங்களை வாங்கினாா். அவா் கீழடி தொல்லியல் அரங்கையும் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com