மகளிா் உதவி மையத்தில் தொலைத் தொடா்பு ஆலோசகா் பணி

மகளிா் உதவி மையத்தில் காலியாக உள்ள தொலைத் தொடா்பு ஆலோசகா் பணிக்கு, ஜூலை 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிா் உதவி மையத்தில் காலியாக உள்ள தொலைத் தொடா்பு ஆலோசகா் பணிக்கு, ஜூலை 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் செயல்படும் சமூக நல ஆணையத்தின் கீழ் மகளிா் உதவி மையம் இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள தொலைத் தொடா்பு ஆலோசகா் பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு சமூகப்பணி, உளவியல், ஆலோசனை உளவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தது ஒரு ஆண்டு அனுபவம் பெற்றவா்கள் அல்லது குறிப்பிடப்பட்ட பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 23 முதல் 35 வரை. இது ஒரு ஒப்பந்தம் முறையிலான தொகுப்பூதிய பணி ஆகும்.

இந்தப் பணிக்கான விண்ணப்பத்தை  இணையதள முகவரியில்  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல்  மூலமாகவோ, வருகிற 21-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com