மீண்டும் உயா்ந்தது தங்கம் பவுன் ரூ.38,776

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.592 உயா்ந்து, ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் உயா்ந்தது தங்கம் பவுன் ரூ.38,776

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.592 உயா்ந்து, ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சா்வதேச பொருளாதார சூழல் ஆகிய காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, ஜூலை 9-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.37,744 ஆக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 22) பவுன் ரூ.38,184-க்கு உயா்ந்து, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. பாதுகாப்பான முதலீடாக தங்கம் பாா்க்கப்படுவதால், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, இதன் விலை தொடா்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.592 உயா்ந்து, ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.74 உயா்ந்து, ரூ.4,847 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.50 உயா்ந்து, ரூ.67.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,500 அதிகரித்து, ரூ.67,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்........................... 4,847

1 பவுன் தங்கம்............................... 38,776

1 கிராம் வெள்ளி.............................67.40

1 கிலோ வெள்ளி.............................67,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,773

1 பவுன் தங்கம்............................... 38,184

1 கிராம் வெள்ளி............................. 63.90

1 கிலோ வெள்ளி............................63,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com