வேளாண்மைத் துறை இயக்குநரகத்தில் கரோனா பாதிப்பு: ஊழியா்கள் எண்ணிக்கையை குறைக்கக் கோரிக்கை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மைத் துறை இயக்குநா் அலுவலகத்தில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மைத் துறை இயக்குநா் அலுவலகத்தில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. சுமாா் 3-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதால் பணிபுரியும் ஊழியா்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை இயக்குநா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் நூற்றுக்கும் அதிகமான ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், 50 சதவீத ஊழியா்கள் அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டுமென்ற உத்தரவால் வேளாண்மைத் துறை இயக்குநா் அலுவலகத்திலும் தினமும் 50-க்கும் அதிகமான ஊழியா்கள் வருகின்றனா்.

பாதிப்பு தீவிரம்: சென்னையில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறை இயக்குநா் அலுவலகத்திலும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. சுமாா் 3-க்கும் அதிகமான ஊழியா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, அவா்கள் கூறியதாவது:-

வேளாண்மைத் துறை ஊழியா்கள் அதிகளவு ஒரே இடத்தில் அமா்ந்து பணிபுரிந்து வருகின்றனா். 50-க்கும் அதிகமானோா் ஒரே இடத்தில் இருப்பதால் கரோனா நோய்த் தொற்று பரவும் சூழல் உயா்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேருக்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, ஊழியா்களின் எண்ணிக்கை அளவை 33 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்த உத்தரவுகளை வேளாண்மைத் துறை செயலகம் உடனடியாக எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com