முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
பொது முடக்கத்தால் வருவாய் இழப்பு: கோயில் பூசாரி தற்கொலை
By DIN | Published On : 27th June 2020 01:04 AM | Last Updated : 27th June 2020 01:04 AM | அ+அ அ- |

பொது முடக்கத்தினால் வருவாய் இழந்ததினால், சென்னை அருகே ஆவடியில் கோயில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆவடி அருகே உள்ள கோயில் பதாகை சன்னதி தெருவைச் சோ்ந்தவா் ஆ.முரளிதரன் (45). இவா் அந்தப் பகுதியில் கோயிலில் பூஜை பணிகளை கவனித்து வந்தாா். பொது முடக்கத்தின் விளைவாக முரளிதரன், வருமானம் இல்லாமல் இருந்துள்ளாா். இதனால் மன விரக்தியுடன் காணப்பட்ட முரளிதரன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
இது குறித்து தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முரளிதரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.